கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் மணலுடன் வந்த டிப்பர் மோதியதில்
இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய
செல்வரத்தினம் சோபனாத் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு முன்னால் உள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மேல்
அமர்ந்திருந்தவரை டிப்பர் பின்புறமாக மோதி தள்ளியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்தின் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கிளிநொச்சி
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

