Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கையின் சுதந்திர தினத்தை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் கரி நாள் பேரணி

இலங்கையின் சுதந்திர தினத்தை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் கரி நாள் பேரணி

இலங்கையின் சுதந்திர தினத்தை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில்
கரி நாள் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள பரியோவான் ஆலய மண்டபத்தில்
நேற்று காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மதகுருமார்,  மட்டக்களப்பு மாவட்ட வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவு சங்கத்தின் பிரதிநிதிகள்,
பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என
பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments