Tuesday, May 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னார் மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தேசிய கொடி
ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அரசாங்க அதிபரினால் சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் உதவி மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள் , பிரதேச செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்,  நானாட்டான்,  முசலி,  மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய
பிரதேச செயலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள்
இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments