Friday, May 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுருநாகலில் பற்றி எரிந்த தலைக்கவசத் தொழிற்சாலை

குருநாகலில் பற்றி எரிந்த தலைக்கவசத் தொழிற்சாலை

குருநாகல்இ பரகஹதெனிய பிரதேசத்தில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை
ஒன்றில் இன்று (10) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீ பரவலால் தொழிற்சாலையில் பொருட்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்கள் என முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவி அந்தப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக சூழ்ந்தது.

இதனால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிபத்தையடுத்து
பொலிஸாரும் தீயணைப்புப் படை அதிகாரிகளும் குறித்த பகுதிக்கு விரைந்து
தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதீக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments