யாழ்ப்பாணம் – மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர்
கொண்டு வந்த துப்பாக்கி போலி துப்பாக்கி என்றும், குறித்த நபரை
தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் கொடுத்த தகவல் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அவர் சந்தைக்கு கொண்டுச் சென்ற துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபர் சந்தைக்கு கொண்டு சென்றது போலி துப்பாக்கி
எனவும் , அவர் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்
என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.


