Thursday, February 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசட்டத்திற்கு முன் அனைவரும் சமம்- ஸ்ரீ பவானந்தராஜா எம்.பி

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்- ஸ்ரீ பவானந்தராஜா எம்.பி

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வட்டுக்கோட்டை – இன்பச்சோலை வீதி புனரமைப்பில்
கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே
அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரியவருகையில்,

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என ஜனாதிபதியும் சொல்லியிருந்தார்.
சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ நாங்கள் அதை எடுப்போம்.
யாரில் பிழை இருக்கிறதோ அவர்களுக்கான தண்டனையை நாங்கள்
கொடுப்போம். இந்த விடயத்தில் சட்டம் தனது வேலையை சரியாக செய்யும்.
பொலிஸாரோஇ நாடாளுமன்றஉறுப்பினர்களோ அல்லது பிரதேச சபை
உறுப்பினர்களோ யார் பிழை செய்தாலும்,  யார் பிழை செய்தது என்பதை
தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம். எனவே நீதிமன்றம் சரியான நடவடிக்கை
எடுக்கும் என்றார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments