Friday, May 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவவுனியாவில் 22 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வவுனியாவில் 22 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிஸாருக்கு
கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் கடமையில் இருந்த
பொலிஸ் குழுவினர் கப்ரக வாகனம் ஒன்றை வழிமறித்து அதில் சோதனையில்
ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் கஞ்சா கொண்டு
செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த வாகனத்தில் இருந்த இருவர் பொலிசாரால் கைது
செய்யப்பட்டதுடன்,  அதில் இருந்த 22 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டது.

குறித்த கஞ்சா போதைப்பொருள் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு
கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments