Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு யாழில் நேர்ந்த துயரம்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு யாழில் நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம்,  மண்கும்பான் பகுதியில் கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய
விபத்தில்,  இலங்கைக்குச் சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இருவர்
உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 67 மற்றும் 70
வயதுடைய இருவர்,  வாடகை கார் ஒன்றில் மண்கும்பான் பகுதியில்
பயணித்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது,  குறித்த கார் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர்
மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர்,
காரின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் என மொத்தம் ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு,  சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments