Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் யாழில் முன்னெடுப்பு

சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் யாழில் முன்னெடுப்பு

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் சரியான முறையில்
வழங்கப்பட வேண்டும் என கோரிய பேரணி ஒன்று இன்று (19)முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை நடைபெறும் ‘சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்’ ஊடாக குறித்த பேரணி இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான பேரணி
ஆளுநர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

கடந்த 78 ஆண்டுகளாக பல்வேறு அரசுகள் நாட்டில் ஆட்சி செய்தபோதிலும்,
வடக்கில் வாழும் சிங்கள மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எனவும் ஏனைய இனங்களின் பிரச்சினைகள் அரசியல் வழிகளில் முன்வைக்கப்பட்டாலும்இ வடக்கு சிங்கள மக்களின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன.

30 ஆண்டுகள் நீண்ட உள்நாட்டுப் போருக்கு முன்பும்,  அதன் போதும், பின்னரும்
அவர்கள் பல்வேறு இழப்புகளையும் அநீதிகளையும் சந்தித்துள்ளனர்.

இதுவரை எந்த அரசும் அவர்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்கவில்லை.
இந்த பிரச்சினைகள் குறித்து பேசப்படும் ஒவ்வொரு முறையும்,  அவை
இனவாதமாகக் குற்றம் சாட்டப்பட்டு,  தேசிய ஒற்றுமைக்கு எதிரானதாகக் கூறி
ஒதுக்கப்படுகின்றன.

குறித்த பேரணி ஒவ்வொரு மாவட்டமும் சென்று இறுதியாக கையெழுத்து
பெறப்பட்டு ஜனாதிபதி செயலகத்தில் நிறைவு பெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments