Sunday, March 22, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்ஹோர்முஸ் வழி எண்ணெய் கப்பல்களுக்கு கட்டணம்

ஹோர்முஸ் வழி எண்ணெய் கப்பல்களுக்கு கட்டணம்

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல் செல்வதற்கு,  ஒவ்வொரு முறையும்,  ரூ.18.50 கோடி கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக
கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது. இதனால்,  உலக அளவில் மசகு எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு,  பெட்ரோல்,  டீசல்
மற்றும் காஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற
வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி ட்ரம்ப்,  இதற்காக ஆசியா மற்றும்
ஐரோப்பா நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

எண்ணெய் ஏற்றுமதியை தொடரும் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை கடந்த
90 கப்பல் இந்த நிலையில்,  ஹோர்முஸ் நீரிணையை நிர்வகித்து வரும் ஈரான்,
உலகளவில் நிலவும் மசகு எண்ணெய் பற்றாக்குறையை தனக்கு சாதகமாக
பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதாவது,  வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் டேங்கருடன் வரும் சரக்கு கப்பல்கள்,  ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக பயன்படுத்த,  ரூ.18.50 கோடி வரை கட்டணமாக வசூலிக்க ஈரான் பரிசீலித்து வருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments