எதிர்வரும் 25ஆம் திகதி சுமார் 37, 000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல்
ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 07 ஆம் 08 ஆம் திகதிகளில் 37, 000 மெற்றிக் தொன் பெற்றோல் நாட்டுக்குக்
கொண்டுவரப்பட்டது.
உலக சந்தையில் நிலவும் விலை அதிகரிப்புஇ இலங்கை பெற்றோலிய
கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள செலவீன அதிகரிப்பு என்பனவே விலை
எரிபொருள் விலை திருத்தங்களுக்கு பிரதான காரணமாகும்.
எதிர்வரும் 25 ஆம் திகதி மேலும் 37இ000 மெற்றிக் தொன் டீசல் அடங்கிய கப்பல்
நாட்டை வந்தடையவுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது பாரிய நட்டத்தையே
எதிர்நோக்கி வருகிறது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான சுமையை குறைக்க அரசாங்கம் பெரும் தொகையை மானியமாக வழங்குகிறது.
அதன்படி, ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு
20 ரூபாவையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது.
இந்த மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கம் மாதமொன்றுக்கு
மேலதிகமாக 20 பில்லியன் ரூபாய் செலவை ஏற்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

