Sunday, March 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமட்டக்களப்பில் கிணற்றில் இருந்து இளம் தாய் மீட்கப்பட்ட சம்பவம் - மூவர் கைது

மட்டக்களப்பில் கிணற்றில் இருந்து இளம் தாய் மீட்கப்பட்ட சம்பவம் – மூவர் கைது

மட்டக்களப்பு – தாந்தாமலை பகுதியில் கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட இளம்
தாயை கடத்தி தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த மூன்று பேர் நேற்றிரவு
கைது செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு – தாந்தாமலை – நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த
கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட பெண் தொடர்பாக மாவட்ட புலனாய்வுப்
பிரிவின் தகவலுக்கமைய பொலிசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த பெண்ணை கடத்தி மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை
கொள்ளையடித்த காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த 3 பேர் நேற்றிரவு
வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிணற்றில் இருந்து சடலமாக மீட்ட பெண்ணையும் இதே பாணியில் அவர்கள்
செய்துள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு இரண்டரை வயது குழந்தையுடன் சென்று காணாமல் போன இளம் தாய் மறுநாள் வெள்ளிக்கிழமை பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.

அவரது குழந்தை வயல் அந்த கிணற்றுக்கு அருகில் உள்ள வயல் பகுதியில்
கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.

அதேநேரம்இ அவரது தாய் மீட்கப்பட்ட கிணற்றில் இருந்து அழுகிய நிலையில்
பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது

இது தொடர்பாக மட்டக்களப்ப மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
லலித்த லீலா ரத்தின தலைமையில் கொக்கட்டிச்சோலை வவுணதீவு, ஆயித்தியமலை,  வெல்லாவெளி,  மட்டு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் விசேட குற்ற விசாரணைப் பிரிவு,  மாவட்ட புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து இரவு பகலாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு குறித்த பெண் ஒருவர் மற்றும்
முச்சக்கர வண்டி தொடர்பாக கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து அதன்
பொறுப்பதிகாரி தலைமையில் புலனாய்வு பிரிவினர் பொலிசாருடன்
இணைந்து வந்தாறுமூலை ஆலையடி வீதியில் உள்ள வீடு ஒன்றை நேற்றிரவு 7 மணியளவில் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

இதன்போது,  அங்கு தலைமறைவாகியிருந்த வவுணதீவு காஞ்சிரம்குடாவைச்
சேர்ந்த 26 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்துஇ குறித்த பெண்ணின் கணவரான காஞ்சிரம்குடா வைச் சேர்ந்த
34 வயதுடைய இளைஞன் மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரும் கைதாகினர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கர
வண்டியும் மீட்கப்பட்டுள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட கணவன் மனைவி சம்பவ தினம் அவர்களது வீட்டில்
இருந்து ஆயித்தியமலை பகுதி சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது வவுணதீவு பிரதேச செயலக காரியாலயத்துக்கு முன்னால் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்த இளம் தாயை கண்டு முச்சக்கர வண்டியை நிறுத்தி எங்கே போகிறீர்கள் என வினவியுள்ளனர்.

அதற்குபு பதிலளித்த தாய் மட்டக்களப்பு நகருக்கு போக போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த பெண் தாங்கள் அங்கு செல்வதாகவும் வருமாறு கோரினார்.

அதற்கு பதிலளித்த இளம் தாய்,  முச்சக்கர வண்டியில் பயணிக்கும் அளவு
தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்த போது 100 ரூபாய் தந்தால் போதும்
என தெரிவித்து இளம் தாயையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு
நகரை நோக்கி பயணித்தனர்.

இதன்போது,  அடகு வைத்த தனது குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்கப்
போவதாக தெரிவித்த குறித்த இளம் தாய் நகரை சென்றடைந்ததும் குழந்தையுடன் முச்சக்கர வண்டியை விட்டு இறங்கியுள்ளார்.

இறங்கிய அந்த இளம் தாய்க்கு பின்னால் குறித்த பெண்ணும் தானும் வருவதாக
தெரிவித்து பின் தொடர்ந்து சென்ற நிலையில் அங்கு அவர் அடகு வைத்த
தங்க ஆபரணத்தை மீட்டெடுத்துக் கொண்ட பின்னர் குறித்த பெண் தாங்கள்
மீண்டும் வவுணதீவு போவதாகவும் உங்களுடன் இன்னொருவரை ஏற்றி
குறைந்த கட்டணத்தில் கொண்டு சென்று விடுவதாக தெரிவித்து அவர்களை
முச்சக்கர வண்டியில் ஏற்றி கொண்டு வலையிறவு பாலத்தை அண்மித்த போது
அவருக்கு மயக்க மருந்து கலந்து பழச்சாறு போத்தலை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளம் தாய் மயக்கமடைந்தார்.

இதனை தொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டி வலையிறவு பாலத்தை கடந்து
சென்ற போது அதில் இருந்து குறித்த பெண் இறங்கியுள்ளார்.

இதன்பின்னர,  அங்கு காத்திருந்த 22 வயதுடைய இளைஞன் முச்சக்கர வண்டியில்
ஏறியுள்ளார்.

இதையடுத்து இளம் தாயின் கழுத்தில் இருந்த 5 பவுண் தாலிக் கொடி மற்றும்
ஒரு பவுண் தங்க சங்கிலி என்பன குறித்த இருவரினால் கொள்கையடிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் பின்னர்,  குழந்தையை கொத்தியவலை வயல்பகுதில் வீசி எறிந்து
விட்டு மயக்கமடைந்த இளம் தாயை தாந்தமலை பகுதியிலுள்ள நெல்லிகாடு
வயல் பகுதிக்கு கொண்டு சென்று அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தூக்கி
வீசி விட்டு இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அதேநேரம் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணையும் இதே
பாணியில் பழச்சாற்றில்; மயக்க மருந்து கலந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து அந்த கிணற்றுக்குள் கொண்டு சென்று எறிந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து மாவட்ட குற்ற விசாரணைப்
பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments