Wednesday, April 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇளவாலை வைத்தியசாலை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம்

இளவாலை வைத்தியசாலை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம்

இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமையும்
வைத்தியர் கடமையில் இல்லாமையும் தொடர்பான செய்தியை அடுத்து
இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம்
விளக்கம் கோரியுள்ளது.

இவ்விளக்கத்தை எதிர்வரும் 30ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். பிராந்திய இணைப்பாளர் தன்.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று இளவாலை ஹென்றிஸ் பாடசாலை மாணவன் ஒருவர் பாடசாலை முடிந்து வீடு செல்லும்போது வீதியில் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை மேற்குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையிலேயே அங்கு சிகிச்சை வழங்காத நிலை காணப்பட்டது.

பின்னர் குறித்த மாணவனைஇ பாடசாலையின் முச்சக்கர வண்டியை வைத்தியசாலைக்கு வரவழைத்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு
கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments