Sunday, August 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் நகை திருட்டில் ஈடுபட்ட பணிப்பெண் கைது

யாழில் நகை திருட்டில் ஈடுபட்ட பணிப்பெண் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 54 வயதுடைய பெண் ஒருவர், தாம் வேலை செய்த வீட்டில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். நகர் பகுதியில் கணவன் மனைவி இருவரும் வெளியே வேலைக்கு
செல்பவர்கள் என்பதால்இ வீட்டு வேலைகளுக்காக இந்த பெண்ணை பணியில்
அமர்த்தியிருந்தனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த 14 பவுண் நகைகள்
திடீரென காணாமல் போயின.

இதனை அறிந்த தம்பதியினர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில்
உடனடியாக முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார்,
வீட்டுப் பணிப்பெண்ணையே சந்தேகப்பட்டு கைது செய்தனர்.

குறித்த விசாரணையில் திருடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்கப்பட்டன.

மேலும் இ தான் இதற்கு முன்னர் பணியாற்றிய வேறொரு வீட்டிலும் நகைகளை
திருடியதாக அந்த பெண் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது பொலிஸார் அவரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை
தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments