Wednesday, April 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர்,  மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது,  உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த மோதலில் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிரட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன்,  விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments