Wednesday, April 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஎம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு
வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை,  2026 மார்ச் 01ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,  ஏனைய அனைத்துக் கொடுப்பனவுகளையும் மறு அறிவித்தல் வரை அதே விகிதத்தில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த காலப்பகுதியில் மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக இலங்கையின் எரிபொருள் விலைகளும் பலமுறை திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments