Wednesday, April 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகடலட்டை பிடித்த 36 மீனவர்கள் பிணையில் விடுதலை

கடலட்டை பிடித்த 36 மீனவர்கள் பிணையில் விடுதலை

கிளிநொச்சி,  பூநகரி கடற்பரப்பில் கடந்த 30 ஆம் திகதி இரவு சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த 36 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று (31) பிற்பகல் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில்
இவர்கள் முற்படுத்தப்பட்ட போது,  36 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா
பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க அவர் உத்தரவிட்டார்.

அத்துடன்இ அவர்கள் பயன்படுத்திய ஆறு படகுகளும் தலா ஏழு இலட்சம் ரூபா
சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டன. இந்த வழக்கு எதிர்வரும்
மே மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments