Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை11 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவர் கைது

11 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவர் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் நேற்று (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது
வீட்டின் அருகே வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு தவறான
நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டது. அந்தவகையில் குறித்த சந்தேகநபரை வட்டுக்கோட்டை
பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

சிறுமி பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments