Saturday, April 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஎரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது.

நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகக் கடமையாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு,  இலங்கை திட்டமிடல் சேவையின்  சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் தேசிய திட்டமிடல்,  பொது நிதி மேலாண்மை,  பருவகால பொருளாதார முன்கணிப்பு,  அபிவிருத்தி நிதி,  நிதி பகுப்பாய்வு,  வரி கொள்கை மற்றும் உயர்கல்வி திட்டமிடல் ஆகிய துறைகளில் நீண்டகால அனுபவமிக்கவர்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதி மற்றும் பொருளாதார விவகார பிரிவின் தலைவராகப் பணியாற்றிய அவர்,  பொருளாதார நிர்வாகம் மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பான மூலோபாயக் கொள்கை வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments