Saturday, April 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் கோர விபத்து

யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் கோர விபத்து

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி,  நுணாவில் சந்தி பகுதியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும்,
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறியும் நேருக்கு நேர்
மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற யாழ்ப்பாணம்,
குருநகர் – இராயசிங்கம் வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவரே சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சாவகச்சேரி
போக்குவரத்து பொலிஸார்,  பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

சாரதியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர்,  இன்று (24)
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments