கொஹொம்பஸ்தலாவ, மங்கலகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில்
நபரொருவர் உயிரிழந்தள்ளதாக மங்கலகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 73 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கருகில் வந்த காட்டு யானையை விரட்ட முயன்ற போதே
யானையின் தாக்குதலுக்கு குறித்த நபர் உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மங்கலகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

