Tuesday, April 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை600, 000 டொலர் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

600, 000 டொலர் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600, 000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமக்குரிய கொடுப்பனவு கிடைக்கவில்லை என அமெரிக்கத் அஞ்சல் சேவை விடுத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அஞ்சல் திணைக்களத்தின் ஊடாகச் செலுத்தப்பட்ட சுமார் 600, 000 அமெரிக்க டொலர் நிதியே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் அஞ்சல் திணைக்களமும் இணைந்து
விசாரணைகளை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர்
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments