Thursday, April 30, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்துப்பாக்கியுடன் புகைப்படம் வெளியிட்ட ட்ரம்ப்

துப்பாக்கியுடன் புகைப்படம் வெளியிட்ட ட்ரம்ப்

ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,  இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது என தெரிவித்து துப்பாக்கிய ஏந்தியபடியான
புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும்,  அணு ஆயுத முயற்சியை கைவிட வேண்டும் என்று ஈரானை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதேவேளை,  அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் சில நிபந்தனைகளை
விதித்துள்ளது.

இந்நிலையில்,  தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுவாக எழுத்து மூலமாக தனது கருத்துகளைத் தெரிவிக்கும் டொனால்ட் ட்ரம்ப்,  இம்முறை புகைப்படம் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். குண்டுகள் வெடிக்கும் பின்னணியில்,  கையில் அதிநவீன துப்பாக்கியுடன் திரைப்பட கதாநாயகன் போல் காட்சியளிக்கும் டொனால்ட் ட்ரம்ப்,  ‘இனியும் நல்லவராக இருக்க முடியாது’ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

‘ஈரானால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை. அணுஆயுதமற்ற ஒப்பந்தத்தில்
எப்படி கையெழுத்திடுவது என்பது குறித்து அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள்
விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்’ என ட்ரம்ப் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments