ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கிய
நியமன உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.
த.வெ.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஜோசப் விஜய்யின் தனிப்பட்ட
ஜோதிடரரான ரத்தன் பண்டிட்டைஇ முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக
(அரசியல்) நியமனம் செய்வதாக செவ்வாய்க்கிழமை அரசாணை
வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும்
கண்டனத்தை பதிவு செய்ததுடன், உடனடியாக அரசாணையைத்
திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வி.சி.க. எம்.எல்.ஏ. வன்னி அரசு, தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் நியமனத்துக்கு எதிராக சென்னை
உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி
என்பவர் அவசர வழக்காக விசாரிக்க மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன், ரத்தன்
பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கிய நியமன அரசாணையை திரும்பப்
பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெறும் 24 மணிநேரத்துக்குள் பணி நியமன
அரசாணையை முதல்வர் விஜய் திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

