வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச்
சேர்ந்த குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்றையதினம்
2 கிராம் ஹெரோயினுடன் கைது செய்தனர்.
கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பொலிஸ் தடுப்பு
காவலில் வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை அவருக்கு உடல்
சுகயீனம் ஏற்பட்டது.
அதன்பின்னரே, பொலிஸார் தன்னை கைது செய்ய வரும்போது 10 கிராம்
எடையுடைய ஹெரோயினை பொலுத்தீன் பையுடன் விழுங்கிய விடயத்தை
கூறியுள்ளார்.
பின்னர் பொலிஸார் அவரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
குறித்த இளைஞனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக
தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த இளைஞன் இதற்கு முன்னரும் போதைப்பொருளுடன்
கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில்
நடைபெற்று வருகின்றதாக பொலிஸ் தெரிவித்தனர்.

