தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை (15) நிறைவடையவுள்ளது.
புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்கள்
அப் பதவிகளில் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த
ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி
லலித் ஏக்கநாயக்க கடமையாற்றினார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள்
ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர்.

