தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று (25) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய நான்கு மாவட்டங்களின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட எச்சரிக்கை இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, அயகம மற்றும் எஹலியகொட பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் கட்ட எச்சரிக்கை களுத்துறைஇ கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இது நாளை (27) பிற்பகல் 4.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

