Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeசினிமாபாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

பாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

அரசு மரியாதையுடன் இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க
இறுதி அஞ்சலிசெலுத்தப்பட்டது

பாக்யராஜின் உடல்,  சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்துக்கு
கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு
முதல்-அமைச்சர் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அமைச்சர்
விஜய் மற்றும் நடிகர்-நடிகைகள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில்,  பொதுமக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதையடுத்து மறைந்த
இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. பின்னர்
பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து
பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பாக்யராஜ் உடலை நடிகர்கள்
சரத்குமார்,  பார்த்திபன் ஆகியோர் தோளில் சுமந்து சென்றனர்.
இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர் பங்கேற்றனர்.

பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த்,  ராஜ்மோகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கம்பீரமாக அணிவகுத்து நின்ற பொலிஸார் தலா 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பாக்யராஜ் உடலுக்கு அவரது சமுதாய முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றன. அப்போது பாக்யராஜ் உடலுக்கு மனைவி பூர்ணிமா முத்தமிட்டு பிரியாவிடை கொடுத்தார். தொடர்ந்து மகன் சாந்தனு தந்தை பாக்யராஜுக்கு இறுதி சடங்கை செய்தார். அதன்பிறகு அவருடைய உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. திரைக்கதை மன்னன் பாக்யராஜுக்கு திரைத்துறையினர்,, பொதுமக்கள் பிரியாவிடை அளித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments