Sunday, July 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்
இருவர் உயிரிழந்துள்ளனர்.

கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 பேர் காயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கவலைக்கிடமாக
இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் இந்த மோதல் இன்று (5)ஏற்பட்டதாக
தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்த ஏனைய 23 பேரும் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments