Thursday, July 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகறுப்பு ஜூலை : பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் நினைவுகூரல்

கறுப்பு ஜூலை : பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் நினைவுகூரல்

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரம் நடைபெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்
இன்று (23) இணைந்து நினைவுகூர்ந்தனர்.

இதனையொட்டி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு
தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில்
பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலை கலவரத்தால் ஏற்பட்ட
உயிரிழப்புகள், இடம்பெயர்வுகள் மற்றும் இழப்புகள் இன்னும் ஆறாத வடுவாகவே
நீடித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தின் பாடங்களை மறக்காமல்இ நல்லிணக்கம், நீதி மற்றும்
நிலையான சமாதானத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடரப்பட வேண்டியது
அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments