Tuesday, October 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசூட்சுமமான முறையில் கடத்தப்படவிருந்த பாலை மர குற்றிகள்

சூட்சுமமான முறையில் கடத்தப்படவிருந்த பாலை மர குற்றிகள்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தேராவில் பகுதியில் இருந்து
பாலை மர குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமியினுள் மறைத்து
யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயாரான பார ஊர்தியின் சாரதி கைது
செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு நேற்று(28) கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக திடீர்
சோதனையின் போது 15 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதி மிக்க
மரக்குற்றிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

மரக்குற்றிகளை மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட நடவடிக்கைபொலிஸாரால்
முறியடிக்கப்பட்டுள்ளதுடன் பார ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாரவூர்தி, மரக்குற்றிகள் என்பவற்றை
கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.திசாநாயக்க தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments