சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 நபர்களை கடற்படையினர்
கைது செய்துள்ளதுடன் 18 சிறிய படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினர், பொலிஸார் மற்றும் மீன்பிடி பரிசோதகர் அலுவலகங்களுடன் இணைந்து, ஓகஸ்ட் 16 முதல் 27 வரையிலான காலப்பகுதியில் நாட்டின் கடற்பரப்பை உள்ளடக்கியவாறு சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
திருகோணமலை இலங்கந்தை, லங்காபடுன, பிளாக் பொயிண்ட்,
அரிசிமலை, நிலாவெளி, கல்குடா, கொக்குதொடுவாய், அடுக்குப்பாடு,
கொக்கனட் பொயிண்ட், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி,
கட்டைக்காடு ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக,
கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளால் இந்த கூட்டு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்இ மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி, கொட்பேஇ மூதூர், முல்லைத்தீவு, கொக்கிளாய், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிலும், கல்குடா மற்றும் நிலாவெளி பொலிஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

