Monday, September 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையோஷிதாவின் வழக்கை விசாரணை செய்ய திகதி நிர்ணயம்

யோஷிதாவின் வழக்கை விசாரணை செய்ய திகதி நிர்ணயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும்
அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச்
சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைஇ நவம்பர் 3 ஆம் திகதி
முன் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதி யோஷித ராஜபக்ஷ வழக்கு விசாரணைக்கு இன்று (28)
அழைக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இரண்டாவது பிரதிவாதியான டெய்சி போரஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அனில் சில்வா,  நீதிமன்றத்தில் ஒரு மருத்துவ
அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

இதன் பின்னர் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நீதிபதி,  இந்த
வழக்கை நவம்பர் 3 ஆம் திகதி விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

சுமார் 57 மில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை 3 வங்கிக் கணக்குகளில்
வைப்பு செய்ததன் மூலம்,  பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்
இழைத்ததாகக் குற்றம் சாட்டி, யோஷிதா ராஜபக்ஷ மற்றும் டெய்சி போரஸ்ட்
ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்குப் பதிவு செய்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments