கிளிநொச்சி ஏ9 வீதியின் இரணைமடு சிவன் கோயில் சந்தியில் இன்று காலை
கோர விபத்து சம்பவித்துள்ளது.
காலை சுமார் 7.30 மணியளவில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளன.
கனகாம்பிகைக்குளம் பகுதியில் இருந்து ஏ9 வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார்
சைக்கிள் மீது, இரணைமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்த
டிப்பர் வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் ஒரு கை துண்டிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, படுகாயமடைந்த அவர் உடனடியாக கிளிநொச்சி பொது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.

