Friday, October 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்

முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்

மொரட்டுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் கொழும்பு கோட்டை முன்னாள் பிரதம நீதவானுமான திலின கமகேயை நீதித்துறைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு,  அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை உட்பட பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தன.

இது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து ஏற்கனவே அவரது பணி இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில்,  தற்போது அவர் பதவியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments