நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (18) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு,
நாளை அதிகாலை 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி. மேல், சபரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா
மாகாணங்களுக்கும், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய
மழை, பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள்
காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில்இ குறித்த பகுதிகளில்
தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத்
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

