Tuesday, October 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னாரில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்

மன்னாரில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்

சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் நேற்று (25)
நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 5 வீடுகள் கடுமையாகச்
சேதமடைந்துள்ளதுடன்,  5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன்,  கூரையின் பகுதிகள்
படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளன.

வீடுகளில் இருந்த மின்சார உபகரணங்களும் செயலிழந்து உள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தை தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் மற்றும்
சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச்
சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டுள்ளனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து
உள்ளதுடன்,  பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சேத விபரங்கள் தொடர்பான
மேலதிக தகவல்கள் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில்
பல பாகங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments