Saturday, November 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகறுப்பு ஜூலை கலவரம்: ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு

கறுப்பு ஜூலை கலவரம்: ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு

1983 கறுப்பு ஜூலை கலவரம் மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து
விரிவான ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக 11 உறுப்பினர்களைக்
கொண்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையிலான
இந்தத் தெரிவுக்குழு தொடர்பான அறிவிப்பைச் சபாநாயகர் வைத்தியர்
ஜகத் விக்கிரமரத்ன இன்று (28.11.2026) பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் குறித்த கலவரங்களினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றிற்கான
பரிந்துரைகளை இந்தத் தெரிவுக்குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என
தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments