Thursday, July 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது

வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வா நகர் பகுதியில் வாக்களிப்பு
நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
நிலையில் வாள்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிசாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பு நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்திடக்கிடமான முறையில்
இருந்த கார் ஒன்றினை சோதனையிடப்பட்தபோதே அதிலிருந்து இரண்டு வாள்களை
பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது
செய்துள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணைகளின் பின்னர்
கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments