Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொத்மலை பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

கொத்மலை பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில்
காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளை
வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

இதன்போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு,  வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார்.

இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி
ஹரினி அமரசூரிய,

இது போன்ற வாகன விபத்துக்களினால் ஒவ்வொரு வருடமும் உயிரிழப்புகள்
ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாரியுள்ளது என்பது எமக்கு தெரியும்.
இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை
மேற்கொண்டு வருகிறார்.

பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை
தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். முடியுமான அளவு மனிதாபிமானத்தோடு  செயற்பாட்டு உதவிகளை வழங்கிய நல்லுலங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

நேற்று நடந்த கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஆபத்தான
நிலையில் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments