Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது,  வாகன இலக்கத் தகடுகள்
வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன
போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது வாகன இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,
கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக
அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,  பதிவு செய்யப்பட்ட செஸி
இலக்கத்தை கொண்ட மோட்டார் வாகனங்களுக்கு வாகன இலக்கத் தகடுகளோ
அல்லது ஸ்டிக்கர்களோ வழங்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புதிய மோட்டார் வாகனம் பதிவு செய்யும் போது இலக்கத் தகடுகள்
வழங்கப்படாவிட்டாலும்இ அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வாகன இலக்கத்தை
வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து
ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

அதன்படி, மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு அந்த இலக்கத்தை பிரதி செய்து,
வாகனத்தில் காட்சிப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் கமல் அமரசிங்க மேலும்
தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments