Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசீரற்ற வானிலை: கொழும்பில் 5 பேர் காயம்

சீரற்ற வானிலை: கொழும்பில் 5 பேர் காயம்

கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று (30) மாலை பெய்த
கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட ஆபத்துகள் காரணமாக ஐந்து பேர்
காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன்
சொத்து சேதங்களும் பதிவாகியுள்ளன.

எமது செய்தியாளர்கள் தெரிவிக்கையில்,  கொழும்பு விஜயராம மாவத்தை,
கொழும்பு ஹோர்ட்டன் பிரதேசம்இ மெட்லண்ட் பிரதேசம்,  கொழும்பு 02 நவம் மாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக வாகனங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments