Sunday, August 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅக்குரணை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தியிடம்

அக்குரணை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தியிடம்

அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை பெரும்பான்மை வாக்குகளுடன்
ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இன்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின்
இஸ்திஹார் இமாதுதீன் மூன்று வாக்குகளை அதிகமாக பெற்று அக்குரணை
பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு தெரிவாகியுள்ளதாக மத்திய மாகாண
உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து அறிவித்தார்.

அக்குரணை பிரதேச சபையில் 30 உறுப்பினர்கள் இருந்தனர்,  ஒரு உறுப்பினர்
வாக்களிப்பில் பங்கேற்கவில்லை,  இதன் காரணமாக 29 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தலைவர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தாரிக் அலி தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு 13 வாக்குகளைப் பெற்றார்.

இதேவேளை,  பொதுஜன ஐக்கிய முன்னணியின் சமிந்த திலகரத்ன 18 வாக்குகளைப்
பெற்று உப தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில்
தேசிய மக்கள் சக்தியின் வசந்த குமார 11 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments