Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் வேண்டாம்

கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் வேண்டாம்

கொரோனா காலப் பகுதியில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என உற்பத்தி நிறுவனமே ஏற்றுக்கொண்டதாகவும் , அதனை அவர்கள் முன்பே அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தடுப்பூசி எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை அல்ல எனவும், தடுப்பூசி செலுத்தப்பட்ட சில சந்தர்ப்பத்தில் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, தடுப்பூசி பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது என விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments