Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் மோட்டர்களை திருடிய இரு இளைஞர்கள் கைது

யாழில் மோட்டர்களை திருடிய இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பல்வேறு பகுதிகளில்
களவாடப்பட்ட 4 மோட்டர்களுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார்
இன்று கைது செய்துள்ளனர்.

சரசாலை, மட்டுவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இரண்டு சந்தேக நபர்கவே
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை,  ஆலயம்,  வீடு என மூன்று இடங்களில் தண்ணீர் மோட்டர்கள்
திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய
சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதையடுத்து சரசாலை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
4 மோட்டர்களையும் சாவகச்சேரி பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments