தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பான விசாரணையில்
கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை, அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நேரடி மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் இல்லாததால்,
துமிந்த திசாநாயக்கவை விடுவிக்க நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டார்.
ஹெவ்லொக் நகரில் உள்ள ஆடம்பர வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T–56 துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணையில்இ கடந்த
மே 23 ஆம் திகதி துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு, கல்கிசை
நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்க
உத்தரவிடப்பட்டார்.
பின்னர், பிணை மனு பரிசீலிக்கப்பட்டு, ஜூலை 14 ஆம் திகதி நிபந்தனைகளின் பேரில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

