Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் விபத்து: பெண் உயிரிழப்பு

யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் விபத்து: பெண் உயிரிழப்பு

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று (12) விபத்துச் சம்பவம்
ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் A9 வீதியில் எழுதுமட்டுவாள்பகுதியில்
இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்த வேளை எழுதுமட்டுவாள் பகுதியில் உள் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் A9 வீதியில் நுழைய முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய செல்வகுணசிங்கம் பேரின்பநாயகி என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments