Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னாரில் கடையடைப்பு

மன்னாரில் கடையடைப்பு

வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்று (18) மேற்கொள்ளப்படும்
என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார், பஜார் பகுதியில் சில உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தவிர பெரும்பாலான வர்த்தக நிலையங்கள்
மூடப்பட்டுள்ளது.

வடக்கில் அதிகரித்த ராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றைய தினம் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில்இ வர்த்தக நிலையங்கள் மாத்திரம் மூடப்பட்டுள்ள போதும் மக்களின் இயல்பு நிலை வழமை போல் காணப்படுகிறது.

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம்
உள்ளிட்டவற்றுக்கு எதிராக இன்றைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு
போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன்
அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments