Sunday, August 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொலிஸாரை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பொலிஸாரை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி மீதுதவறான வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவினை நேற்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமையில் இருந்த கோட்டை
பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைகளில் தலையிட்டதாக கூறி, பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர்,  நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் விசாரித்துள்ளனர்.

இதன்போதுஇ காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு ‘காரை இங்கே நிறுத்தாமல்,  உங்கள் தலையிலா நிறுத்துவது’ என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை மீறியதாக கூறி,
கோட்டை பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு பி அறிக்கையை
சமர்ப்பித்தனர்.

சம்பவ இடத்தில் நடந்த வீடியோ காட்சிகளைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட
தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு செய்யப்பட்ட
கோரிக்கைக்கு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அனுமதி வழங்கினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments