Monday, August 17, 2026
https://thaaitv.com/
Homeஆன்மிகம்மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த
மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி
தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது.

நேற்றையதினம் காலை திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி ,வெளி வீதி உலா வந்தனர்.

அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் தேரில் ஆரோகணித்து ஆயிரக்கணக்கான
பக்தர்கள் வடம் பிடிக்க பஞ்சரத பவனி இடம் பெற்றது.

தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு, தேரில் பச்சை சாத்தப்பட்டதைத் தொடர்ந்து
உற்சவ மூர்த்திகள் ஆலயத்தில் எழுந்தருளினார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments